- செய்திகள், விளையாட்டு

2-வது சுற்றில் சாய்னா, சிந்து மலேசியன் ஓபன் சீரிஸ் பாட்மிண்டன்

ஷா ஆலம்(மலேசியா), ஏப். 7:-

மலேசியாவில் நடந்து வரும் மலேசிய ஒபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர இளம் வீராங்கனை சாய்னா நேவால், பி.வி.சிந்து முன்னேறியுள்ளனர்.

மாறாக, இந்திய ஆடவர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய் ஆகியோர் முதல்சுற்றோடு வெளியேறினர்.

ரூ.3.36 கோடி பரிசுத்தொகை கொண்ட மலேசிய ஒபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி ஷா ஆலம் நகரில் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் தாய்லாந்து வீராங்கனை நிட்சான் ஜின்டாபோலை 21-16, 21-7 என்ற நேர் செட்களில் துரத்தினார் இந்திய வீராங்கனை சாய்னா. இந்த ஆட்டம் 30 நிமிடங்கள் நீடித்தது. 2-வது சுற்றில் கொரிய வீராங்கனை பாய் யோன் ஜூ வை எதிர்கொள்கிறார் சாய்னா.

40 நிமிடங்கள் நடந்த மற்றொரு ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவோவை 21-16, 21-17 என்ற செட்களில் வீழ்த்தினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.  இதற்கு முன், 2015 இந்தோனேசியன் மாஸ்டர்ஸ், 2016 சுவிஸ் ஓபனில் சீன வீராங்கனையிடம் அடைந்த தோல்விக்கு இப்போது சிந்து பழிதீர்த்துக்கொண்டார். 2-வது சுற்றில்கொரிய வீராங்கனை சங் ஜி ஹியுனுடன் மோதுகிறார் சிந்து.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் தாய்லாந்து வீரர் பூன்சாக் போன்சானாவிடம் 21-23, 21-9, 10-21 என்ற செட்களில் போராடி வீழ்ந்தார் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் பிரணாயை 19-21, 20-22 என்ற செட்களில் தோற்கடித்தார் ஜப்பான் வீரர் கென்டோ மொமோதா.

Leave a Reply