- செய்திகள்

19-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் கடை அடைப்பில் த.மா.கா. பங்கேற்கிறது ஜி.கே.வாசன் அறிவிப்பு…

சென்னை, ஆக. 17-
காவிரி டெல்டா மாவட்டங்களில் 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள கடை அடைப்பு போராட்டத்தில் த.மா.கா.பங்கேற்கும் என்று, ஜி.கே.வாசன் கூறினார்.
இது தொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
19-ந் தேதி முழு அடைப்பு
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் படி கர்நாடக அரசு காவிரியிலிருந்து தமிழகத்துக்கு மாதம் தோறும் உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உடனடியாக அமைக்க வேண்டும் போன்றவற்றை மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தும் வகையில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டிணம், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் வருகின்ற 19.8.2016 அன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று இடதுசாரி விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சங்கங்களின் கூட்டு கூட்டம் முடிவு செய்துள்ளது.
த.மா.கா.பங்கேற்கும்
இடதுசாரி விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் என்னை நேரில் சந்தித்து இப்போராட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தனர். தமிழக விவசாயிகளின் உயிர்நாடிப் பிரச்சினை என்பதால் 19.8.2016 அன்று நடைபெற இருக்கின்ற இப்போராட்டத்தில் த.மா.கா. பங்கேற்கும்.
திருவாரூர் பொதுக்கூட்டம்
மேலும் 19.8.2016 அன்று திருவாரூரில் மக்கள் தலைவர் மூப்பனாரின் பிறந்த தின விழாவினை த.மா.கா. கட்சி விவசாயிகள் தினமாக கொண்டாடுவதோடு, மாபெறும் அன்றைய தினம் மாலை 6 மணி அளவில் திட்டமிட்டப்படி பொதுக்கூட்டம் நடத்துகிறது. இந்த கூட்டம், அனைத்து விவசாயிகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் விரைந்து தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நடைபெறுகிறது. இதில் நான் கலந்து கொள்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.

G.K வாசன்
தலைவர் தமிழ் மாநில காங்கிரஸ்

Leave a Reply