- செய்திகள், வணிகம்

18 புளூசிப் நிறுவன பங்குகளில் எல்.ஐ.சி. ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு

புதுடெல்லி, பிப்.23:-
அரசு நிறுவனமான ஆயுள் காப்பீட்டு கழகம் (எல்.ஐ.சி.) கடந்த அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ஆக்சிஸ் வங்கி, பார்தி ஏர்டெல் உள்பட 18 புளூசிப் நிறுவன பங்குகளில் மொத்தம் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது.
கடந்த டிசம்பர் காலாண்டில், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஆக்சிஸ் வங்கி, பார்தி ஏர்டெல் உள்பட 18 நிறுவன பங்குகளை மொத்தம் ரூ.10,400 கோடிக்கு எல்.ஐ.சி. வாங்கியுள்ளது. அதே வேளையில் அதானி போர்ட்ஸ், எல் அண்டு டி, சிப்லா, கோல் இந்தியா, எச்.டி.எப்.சி. ஆகிய 5 நிறுவன பங்குகளில் முதலீட்டை குறைத்துள்ளது. லுப்பின் பங்குகளில் எல்.ஐ.சி. முதலீடு செய்யவில்லை. டாட்டா ஸ்டீல், டாட்டா மோட்டார்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், என்.டி.பி.சி. ஆகிய நிறுவன பங்குகளில் எல்.ஐ.சி. மூலதனம் எந்தவித மாற்றமும் இன்றி உள்ளது.

Leave a Reply