BREAKING NEWS

1600 இந்தியர்களை அமெரிக்கா வெளியேற்றியது: புள்ளி விவர தகவல்

அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்க அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அமெரிக்காவில் உள்ள இந்தியர்களில் 2019 ம் ஆண்டு மட்டும் குடியேற்ற விதிகளை மீறியதாக 1616 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 2014 ம் ஆண்டிற்கு பிறகு ஒரே ஆண்டில் அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளது தற்போது தான். 2018 ம் ஆண்டில் அதிகபட்சமாக 359 பெண்கள் உள்ளிட்ட 9818 இந்தியர்கள் குடியேற்ற விதிகளை மீறியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 611 பேர் அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் எனவும், பஞ்சாப்பை சேர்ந்தவர்களே அதிகமாக சட்ட விரோதமாக அமெரிக்காவில் குடியேறியதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த பலர் உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி அமெரிக்காவில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *