- செய்திகள், வணிகம்

12 மொழிகளில் மொபைல் ‘ஆப்ஸ்’

புதுடெல்லி, டிச. 16:-

இணையதள வர்த்தக நிறுவனமான ஸ்நாப்டீல், வாடிக்கையாளர்கள் தங்களிடம் பொருட்களை ஆர்டர் கொடுப்பதற்காகவும், விற்பனையை அதிகரிப்பதற்காகவும் 12 மொழிகளில் தங்களின் மொபைல் ஆப்ஸ்களை(செயலி)நேற்று அறிமுகம் செய்துள்ளது.

ஸ்நாப்டீல் நிறுவனர் ரோகித்பன்சால் நேற்று கூறுகையில், பலவிதமான மொழிகள் பேசும் மக்கள் உடைய நம்நாட்டில், மக்கள் தங்களின் தாய்மொழி மூலம் எங்களை தொடர்பு கொள்ளும் வகையில் செயலிகளை உருவாக்கி இருக்கிறோம். அதன்படி ஆங்கிலத்தோடு, இந்தி மற்றும் தெலுங்கில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. வரும் 2016 ஜனவரி 26-ந்தேதி முதல், குஜராத்தி, தமிழ், மராத்தி, பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒரியா, அசாமி, பஞ்சாப் ஆகிய மொழிகளில் அறிமுகம் செய்யப்படும். அதன்பின்பு, அடுத்த 10 மொழிகளில் அறிமுகம் செய்யப்படும்  என்றார்.

Leave a Reply