BREAKING NEWS

ஒரே நாளில் 11 படங்கள் ரிலீஸ் !

ஒவ்வொரு ஆண்டும் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் பல படங்கள் வெளிவருவது வழக்கம். அந்த வகையில் இந்த வார வெள்ளிக்கிழமையான வருகிற 13ம் தேதி 11 படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. ‘‘காளிதாஸ்‘‘”50 ரூவா, சென்னை டூ பாங்காக், கேப்மாரி, சாம்பியன், கைலா, கருத்துக்களைப் பதிவு செய், மாமங்கம், தேடு, திருப்பதிசாமி குடும்பம்” மற்றும் ஆங்கில படமான ;ஜுமான்ஜி‘ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் இரண்டு படங்கள் மட்டுமே பிரபல இயக்குனர்கள் இயக்கி இருக்கும் படம்.. ஜெய் நடித்துள்ள ‘கேப்மாரி’ என்ற ‘ஏ’ சான்றிதழ் பெற்ற படத்தை நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருக்கிறார். ‘சாம்பியன்’ படத்தை சுசீந்திரன் இயக்கி உள்ளார். மற்ற படங்களில் ‘காளிதாஸ்’ படத்தில் மட்டுமே பிரபல நடிகரான பரத் நடித்திருக்கிறார். மற்ற படங்களின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் பலரும் புதுமுகங்களே.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *