- செய்திகள்

10-ம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு…

 

சென்னை,ஜூலை.28-

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் வெளியானது. இதில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் காணலாம். அதே இணையதளத்தில் தேர்வர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதே போல் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Leave a Reply