- செய்திகள், வணிகம்

1 லட்சம் கிராமங்களுக்கு வை-பை வசதி பி.எஸ்.என்.எல். திட்டம்

புதுடெல்லி, ஏப்.11:-

இந்த ஆண்டுக்குள் 1 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு வை-பை வசதி  ஏற்படுத்த பி.எஸ்.என்.எல். நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைவர் அனுபம் ஸ்ரீவஸ்தவா இது குறித்து கூறியதாவது:-

கடந்த 2011-ம் ஆண்டு ரூ.20 ஆயிரத்து 100 கோடி செலவில் 2.5 லட்சம் கிராமங்களுக்கு அதிவேக இன்டர்நெட் இணைப்பு வழங்கும் திட்டத்துக்கு முந்தைய மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த பணிகள் 2013-ம் ஆண்டில் நிறைவு பெற்று இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு காலக்கெடுவை தாண்டியும் இன்னும் இது நிறைவில்லை.
தற்போதைய மத்திய அரசு 2016 டிசம்பருக்குள் இதனை முடிக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் பைபர் நெட்வொர்க்கை பதிப்பதற்கு அதிக அளவில் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். எனவே வை-பை  தொழில்நுட்பம் மூலம் கிராம பஞ்சாயத்துகளுக்கு இன்டர்நெட் இணைப்பு வழங்க திட்டமிட்டுள்ளோம்.
தற்போது சோதனை அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தின் 3 கிராமங்களில்  வை-பை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் சுமார் 500 சோதனை இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 1 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களுக்கு வை-பை வசதி ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply