- செய்திகள், திருவள்ளூர், மாவட்டச்செய்திகள்

ேதர்தல் விழிப்புணர்வு குறும்படங்களை கேபிள் டி.வி.யில் ஒளிபரப்ப வேண்டும்

திருவள்ளூர், ஏப். 5- கேபிள் டி.வி.யில் தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்களை ஒளிபரப்ப வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அனைத்து கேபிள் டிவி உரிமையாளர்கள் தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்களையும், மே 16-ல் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்போம் என்கின்ற தொடர் வாசகத்தினை ஒளிபரப்பவும், மற்றும் வேட்பாளர்கள் ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவினரின் அனுமதியுடன் விளம்பரங்களை வெளியிடுவது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சுந்தரவல்லி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:-  குறும்படங்கள்
தமிழ்நாடு சட்டசபை பொதுத் தேர்தலை முன்னிட்டு 100 சதவீதம் வாக்குப்பதிவினை அடையும் விதமாக உள்ளுர் கேபிள் டி.வி. மூலமாக தேர்தல் விழிப்புணர்வு தொடர் வாசகத்தினையும், குறும்படங்களையும் வாக்குப்பதிவு நாள் வரை ஒளிபரப்ப வேண்டும்.
அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான வரி விளம்பரங்கள் மற்றும் ஏனைய வகையிலான தேர்தல் விளம்பரங்களை ஊடக சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவினரின் மூலமாக அனுமதி பெறப்பட்ட பின்னரே வெளியிடப்பட வேண்டும். இவற்றை அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு உடன் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
கேபிள் உரிமையாளர்கள்கூட்டத்தில் கூடுதல் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி முத்து, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் கருப்பையா, பெரியசாமி, உதவி இயக்குநர் ஜாகீர் உசேன், பி. ஆர்.ஓ. திவாகர், தாசில்தார்கள் காந்திமதி, கணேசன், ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் மற்றும் அரசு அதிகாரிகள், அனைத்து கேபிள் டி.வி உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply