- செய்திகள், மாவட்டச்செய்திகள்

ெசன்னை தண்டையார்பேட்டையில் வீடுபுகுந்து திருடிய வாலிபரை…

சென்னை, மார்ச். 27-
சென்னை தண்டையார்பேட்டையில் வீடுபுகுந்து திருடிய வாலிபரை ரோந்து போலீசார் மடக்கி பிடித்தனர். அவனிடம் இருந்து 18 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை போலீசார் மீட்டனர்.
ரோந்து பணி
சென்னை தண்டையார்பேட்டை பிள்ளையார்கோவில் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் இரண்டாவது மாடியிலிருந்து யாரோ குதித்து ஓடுவதை அந்த பகுதியில் ரோந்து சென்ற போலீசுார் பார்த்தனர்.  இதையடுத்து ரோந்து பணியில் ஈடுபட்ட தலைமை காவலர் ராஜ்குமார் மற்றும் ஊர்காவல் படையை சேர்ந்த காவலர் தயாளன் ஆகியோர் அந்த குடியிருப்பு பகுதிக்கு சென்று தேடினர். ஆனால் திருடன்  அங்கு இல்லை. தப்பி ஓடி விட்டான்.  இது குறித்து அவர்கள் மற்றொரு ரோந்து வாகனத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து 2ம் ரோந்து வாகனத்தில் வந்த முதல் நிலை காவலர் விஜயகுமார் மற்றும் ஊர்காவல் படை காவலர் பாலு ஆகியோரும்அங்கு வந்தனர். 2 வாகனங்களிலும் போலீசார் திருடனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
கைது
அப்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரின் அடியில் திருடன் பதுங்கியிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் காரை சுற்றி வளைத்து திருடனை பிடித்தனர். விசாரணையில் அவன் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த அந்தோணி (வயது 19) என்பது தெரியவந்தது.
அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில்  வசித்தவர் ஊருக்கு சென்று விட்டதால் அதனை உடைத்து உள்ளேயிருந்த 18 பவுன் நகை, 500 கிராம் வெள்ளி பொருட்கள், ஒரு லேப் டாப், 2 செல்போன்கள் ஆகியவற்றை திருடி சென்றதை அந்தோணி ஒப்புக் கொண்டான். இதையடுத்து போலீசார் அந்தோணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்
———–

Leave a Reply