- செய்திகள், மாநிலச்செய்திகள்

ஹைதராபாத் பல்கலைக்கழகம் அளித்த டாக்டர் பட்டத்தை திருப்பி அளிக்க எழுத்தாளர் வாஜ்பாய் முடிவு

புதுடெல்லி, ஜன. 20:-

மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், பல்கலைக்கழக நிர்வாகத்தக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், ஹைதராபாத் பல்கலைக்கழகம் அளித்த டாக்டர் பட்டத்தை திருப்பி அளிக்க பிரபல எழுத்தாளர் அசோக் வாஜ்பாய் முடிவு செய்துள்ளார்.

தலித் மாணவர் ரோகித் தற்கொலை செய்த விவகாரம் நாடு முழுவதும், மாணவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து செய்தி நிறுவனத்துக்கு எழுத்தாளர் வாஜ்பாய் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சகிப்பின்மை மற்றும் தலித்துகளுக்கு எதிரான நடவடிக்கையின் காரணமாக, எழுத்தாளராக  வேண்டும் என்று நினைத்த தலித் மாணவர் ேராகித் வெமுலா, தற்கொலைக்கு தூண்டப்பட்டு உள்ளார். அரசியல் நிர்ப்பந்தத்தின் காரணமாக செயல்பட்டதாக கூறப்படும், பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எனக்கு அளிக்கப்பட்ட டாக்டர் பட்டத்தை நான் திருப்பி கொடுக்க உள்ளேன். கல்வி நிலையம் மனித மாண்புக்கும், அறிவுக்கும் எதிராக நடந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்தாளர் வாஜ்பாயிக்கு, டி.லிட் (டாக்டர் அப் லெட்டெர்ஸ்) எனப்படும் உயரிய டாக்டர் பட்டத்தை மத்திய  ஹைதராபாத் பல்கலைகழகம் அளித்தது. மதசகிப்பின்மை பிரச்சினை விஸ்வரூபம் எடுத்திருந்தபோது, சாகித்ய அகாடெமி விருதை வாஜ்பாய் திருப்பி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply