- செய்திகள், விளையாட்டு

ஹாட்ரிக்' சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச் மியாமி ஓபன் டென்னிஸ்

மியாமி, ஏப்.5:-
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் நோவாக் ஜோகவிச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள மியாமியில் ஏடிபி ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

ஜோகோவிச் 6-3, 6-4 என்ற கணக்கில் ஜப்பானின் நிஷிகோரியை வென்று பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச் இந்தப் போட்டியில் முன்னாள் வீரர் ஆன்ட்ரே அகஸ்ஸியின் சாதனையை சமன் செய்துள்ளார். இருவரும் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் ஜோகோவிச் ரூபாய் 6 கோடியே 75 லட்சத்தைப் பரிசாக பெற்றுள்ளார். இந்தப் போட்டியில் மிகவும் சிறப்பாக விளையாடியதாக ஜோகோவிச் குறிப்பிட்டுள்ளார். மேலும் மிகச் சிறந்த வீரருக்கு எதிராக சரியான நேரத்தில் வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply