- செய்திகள், விளையாட்டு

ஹர்திக் பாண்ட்யாவுக்கு தோனி பாராட்டு ஆசிய கோப்பையில் இந்தியா வெற்றி

மிர்பூர், பிப்.26:-
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு ஹர்திக் பாண்ட்யாவின் பேட்டிங்கும், பந்து வீச்சும் மிக முக்கிய காரணம் என்றும் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பாராட்டு தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டியில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா 18 பந்துகளில் 31 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு பெரிதும் வித்திட்டார். மேலும் ரோஹித் சர்மாவும், பாண்ட்யாவும் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தனர். அத்தோடு மட்டும் அல்ல பாண்ட்யா 1 விக்கெட்டை வீழ்த்தி 23 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

இந்த நிலையில் பாண்ட்யாவின் பேட்டிங், பந்து வீச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள தோனி பாண்ட்யாவின் சிறப்பான பந்து வீச்சு இந்திய அணிக்கு வலு சேர்த்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறிய அவர், 7 பேட்ஸ்மேன்கள் தேவையா என்று கருத்தும் நிலவுகிறது என்றும் ஹர்திக் போன்ற பேட்ஸ்மேன்கள் இருக்கையில் ஏன் 7 பேட்ஸ்மேன்கள் இருக்கக் கூடாது என்றும் தோனி கேள்வி எழுப்பினார்.

பாண்ட்யா பேட்டிங்குக்கு புறப்படும் முன் அவருக்கு என்ன சொல்லி அனுப்பினீர்கள் என்ற கேள்விக்கு, பாண்ட்யாவுக்கு எதுவும் சொல்லத் தேவையில்லை, அவர் அறிந்த ஒன்றே ஒன்று பந்தை பவுண்டரிக்கு அனுப்பவதுதான். அதை அவர் நன்றாக செய்தார் என்றும் குறிப்பிட்டார். இந்த ஆட்டத்தில் பாண்ட்யா 4 பவுண்டரிகளையும் ஒரு சிக்ஸரையும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் பந்தில் இருந்தே அவர் அடித்து ஆடினார் என்றும் தோனி தெரிவித்துள்ளார்.
பாண்ட்யாவை புகழ்ந்து தள்ளிய தோனி ரோஹித் சர்மாவையும் பாராட்ட தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply