- சினிமா, செய்திகள்

ஹன்சிகா மீது பொறாமைப்பட்ட பிரபல நடிகை

 

தெலுங்கில் பெரும் வெற்றியை எட்டிய `இஷ்க்' படத்தை பார்த்தகையோடு டைரக்டர் ராஜசேகரை அழைத்துப் ேபசினார், முன்னாள் அழகு நடிகை ஜெயப்பிரதா. `இந்தப் படத்தை தமிழில் நீங்கள் இயக்குகிறீர்கள். என் மகன் சித்து நாயகன். ஒ.கே. தானே?' என்று கேட்க, டைரக்டர் அப்போது தயங்கி தயங்கி ஜெயபிரதாவிடம் வைத்த ஒரே கோரிக்கை, இது தான். “ஹீரோயினாக ஹன்சிகாவை கொடுங்கள்.''
முன்னாள் பிரபல நடிகையால் முடியாத விஷயமா அது? இயக்குனர் சொல்லி முடித்த நேரத்துக்குள் படத்தில் வந்து இணைந்து கொண்டார் ஹன்சிகா. இதன்பிறகு மளமளவென உருவானது தான் `உயிரே உயிரே' படம்.
படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் முதல் சுவாரசியம் ஜெயபிரதா தான். அவர் பேசும்போது, “நான் எத்தனை மொழியில் நடித்திருந்தாலும் தமிழில் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மட்டும் மகத்தானது. இப்போது வரை என்னால் மறக்க முடியாதது. அதனால் என் மகனை சினிமாவுக்கு அறிமுகப்படுத்த நினைத்தபோது அவன் தமிழில் தான்அறிமுகமாக வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதற்காகன வாய்ப்பு இந்தப் படம் மூலம் அமைந்தது. பிரபல டைரக்டர் சத்யஜித்ரே என்னைப் பார்க்கும் போதெல்லாம்  நான் மிக அழகான பெண் என்று சொல்வார். அதில் எனக்கு ஒரு பெருமை. ஆனால் இந்தப் படத்தில் கவிஞர் விவேகா `அழகே அழகே' என்று கதாநாயகி ஹன்சிகாவை வர்ணித்து ஒரு பாடலை எழுதியிருக்கிறார். அந்தப் பாடலைக் கேட்டதும் ஹன்சிகா மீது எனக்கே ஒரு கணம் பொறாமை வந்து போனது'' என்றார்.
படத்தின் டைரக்டர் ஏ.ஆர்.ராஜசேகர் பேசும்போது, “இது அழகான காதல் கதை. காதல் என்பது காதலிப்பவர்களுக்கு மட்டுமின்றி அவர்களை சுற்றியிருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியை தர வேண்டும் என்பது தான் கதை தரும் மெசேஜ். படத்தில் வரும் `ஓ பிரயா' என்ற பாடல் காட்சிக்கு மயங்காத ரசிகர்கள் இருக்க மாட்டார்கள். கேரளாவில் உள்ள ஆலப்புழையில் அதிகாலை 4 மணிக்கு அந்த காட்சியை ஆற்றின் அடியாழத்தில் எடுத்தோம். நாங்கள் 4 மணிக்கு அங்கே போய்ச் சேர்ந்தால் எங்களுக்கு முன்பு அங்கே மேக்கப்பில் நின்று கொண்டிருந்தார், ஹன்சிகா. சினிமாவில் ஹன்சிகா மாதிரியான அர்ப்பணிப்புள்ள நடிகைகள் அபூர்வம்" என்றார். (ஹன்சிகா தலையில் ஒரு டன் ஐஸ். அநேகமாக டைரக்டரின்அடுத்த படத்திலும் ஹன்சிகா தான் நாயகியாக இருப்பார்)

Leave a Reply