- செய்திகள், திருச்சி, மாவட்டச்செய்திகள்

ஸ்ரீரங்கத்தில் மு.க.ஸ்டாலின் பிரசாரம்…

 

ஸ்ரீரங்கம்,ஏப்.19- – ஸ்ரீரங்கம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் பழனியாண்டியை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார்.
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் கடந்த 15-ந்தேதி மதுரையில் முதற்கட்ட பிரசாரத்தைத் தொடங்கினார். இதன் தொடர்ச்சியாக நேற்று கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் நேற்று மாலை 6.40 மணிக்கு ஸ்ரீரங்கம் இராஜகோபுரம் பகுதியில் தொகுதி வேட்பாளர் பழனியாண்டியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது, தி.மு.க தலைவர் தொலைநோக்கு பார்வையுடன் 501 தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார். இந்த அறிக்கையில் மாணவர்கள், விவசாயிகள், மகளிர் மற்றும் அனைத்து தரப்பட்ட மக்களும் பயன்பெறும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. குடும்பங்களின் அன்றாட விலையேற்ற சுமைகளை போக்கும் வகையில் பால் லிட்டருக்கு ரூ.7 குறைப்பு உள்ளிட்டவைகளை விளக்கி பேசினார்.

Leave a Reply