- செய்திகள், விளையாட்டு

ஸ்பானிஷ் லீக் கால்பந்து போட்டி பார்சிலோனாவின் வெற்றி நடைக்கு தடையான ‘ ரொனால்டோ ’ ரியல்மாட்ரிட் அபார ஆட்டம்

பார்சிலோனா, ஏப். 4:-

பார்சிலோனாவில் நடந்த ஸ்பானிஷ்லீக் கால்பந்துப் போட்டியின் லீக் ஆட்டத்தில் வலிமையான பார்சிலோனா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் சாய்த்தது ரியல் மாட்ரிட் அணி.

தொடர்ந்து 39 போட்டிகளாக தோல்வி அடையாமல் வெற்றி நடைபோட்ட பார்சிலோனாவின் பயணத்துக்கு ரொனால்டாவின் கோல் தடை போட்டுள்ளது.

இருப்பினும், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து பார்சிலோனா அணி 76 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்து வருகிறது. 2-ம் இடத்தில் அட்லெட்டிகோ மாட்ரிட் அணி 70 புள்ளிகளுடனும், ரியல் மாட்ரிட்  69 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளன.

பார்சிலோனாவில் உள்ள எல் கிளாசிகோ அரங்கில் ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியில் சனிக்கிழமை இரவு ரியல் மாட்ரிட் அணியை எதிர்கொண்டது பார்சிலோனா அணி.

இரு அணியும் ஒருவருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்று ஆடியதால், முதல் பாதி கோலின்றி முடிந்தது.  பார்சிலோனா நட்சத்திர வீரரும், தங்கப்பந்து விருது வென்ற லியோனல் மெஸ்ஸியின் ஆட்டத்துக்கு மாட்ரிட் வீரர்கள் செக் வைத்தனர்.

2-வது பாதியில் 56-வது நிமிடத்தில் பார்சிலோனா அணி வீரர் பிகு முதல் கோல் அடித்து முன்னிலை பெறச் செய்தார். பதிலடி கொடுத்த ரியல்மாட்ரிட் வீரர்பென்சிமா  62-வது நிமிடத்தில் கோல் அடித்து சமன் செய்தார்.

தொடர்ந்து வேகம் காட்டிய மாட்ரிட் அணி போட்டி முடிய சிறிதுநேரத்தில் 85-வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடித்து அணி வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இவர் மட்டும் கோல் அடிக்கவில்லையென்றால், போட்டி டையில் முடிந்திருக்கும்.

Leave a Reply