- செய்திகள், வணிகம்

ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூருக்கு ரூ.1 கோடி அபராதம்

 

ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூருக்கு ரிசர்வ் வங்கி ரூ.1 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. விதிமுறைகளை மீறி செயல்பட்டதால் அந்த வங்கிக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.
மத்திய பெரும் கடன் தகவல் களஞ்சியத்தை ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ளது. அதில், வங்கிகளில் கடன் பெற்றவர்களின் விவரங்கள் திரட்டப்பட்டு சேமிக்கப்படும். அனைத்து வங்கிகளும் கடன் குறித்த விவரங்களை கட்டாயம் அந்த அமைப்புக்கு தெரிவிக்க வேண்டும். ஆனால் ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் இதனை முறையாக பின்பற்றாது உள்பட விதிமுறைகளுக்கு இணங்க செயல்படாததால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் தெரிவித்துள்ளது.

Leave a Reply