- செய்திகள், விளையாட்டு

ஷஷாங் மனோகர் போட்டியின்றி தேர்வு ஐசிசி சேர்மனாக

துபாய், மே 13:-

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சேர்மனாக இந்தியாவைச் சேர்ந்த ஷஷாங் மனோகர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர் வேறு பதவி வகிக்கக் கூடாது என்ற காரணத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவியை மனோகர் சமீபத்தில் ராஜிநாமா செய்தார். இதையடுத்து ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில் ஒருமனதாக மனோகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மனோகர் 2 ஆண்டுகளுக்கு இந்த பதவியை வகிப்பார்.

சிறந்த வழக்கறிஞரான மனோகர் 2008 முதல் 2011 வரை முதல் முறையாக பிசிசிஐ தலைவராக பதவி வகித்தார். பின்னர் பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா காலமானதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் முதல் இரண்டாவது முறையாக அந்தப் பதவியை வகிந்து வந்தார்.

இதனிடையே ஐசிசி சேர்மானாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள மனோகர்,  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது பெருமையாக உள்ளது என்றும் தன் திறமையின் மீது நம்பிக்கை வைத்து தன்னை ஒருமனதாக தேர்ந்தெடுத்ததற்கு ஐசிசி இயக்குநர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் பிசிசிஐ தலைவராக இருந்த காலத்தில் தனக்கு ஆதரவு நல்கிய அனைவருக்கும் இந்த சமயத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply