- செய்திகள், மாநிலச்செய்திகள்

வைகோவின் நாடகம் தேவையில்லாதது!

தர்மபுரி, ஏப்.27-
தேர்தலில் போட்டியிடுவது குறித்த வைகோவின் நாடகம் தேவையில்லாதது என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
தர்மபுரியில் ேநற்று பா.ம.க. தேர்தல் அலுவலகத்தை பா.ம.க. முதல்-அமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் மாவட்டத்தில் பா.ம.க. வேட்பாளர் அருள் என்பவர் தாக்கப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொலைவெறி தாக்குதலுக்கு காரணமானவர்களை காவல்துறை கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். கடந்த தேர்தலில் என்மீதும் இதேபோல கொலை வெறித்தாக்குதல் நடந்தது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்ககூடாது. ஒருசில அரசியல் கட்சிகள் இதுபோன்ற சம்பவங்களை நடத்தி வன்முறையை தூண்டி வருகிறார்கள் என்ற தகவல்கள் எனக்கு வந்து கொண்டு இருக்கிறது.

இதையே தான் நேற்று வைகோவும் சொல்லி இருக்கிறார். ஒருசில கட்சிகள் சாதி கலவரங்களை தூண்டி விட்டுள்ளார்கள். ஆகவே தேர்தல் ஆணையம் இதை கவனமாக பார்த்துக்கொண்டு தேர்தல் நியாயமாக நடத்துவதற்கும், வேட்பாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்கி சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப் படவேண்டும்.

தேர்தலில் வைகோ போட்டியிடுவதும், இடாததும் அவருடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால் அதற்கு இவ்வளவு பெரிய நாடகம் தேவையில்லை. தான் போட்டியிடாதது பற்றி அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கலாம். அல்லது அறிக்கை விட்டிருக்கலாம். தோல்வி பயம் காரணமாக போட்டியிடவில்லை என கூறி இருக்கலாம். அதை விடுத்து ஏதோ ஒரு நாடகத்தை நடத்தி இப்படி செய்தது நம்பும்படியாக இல்லை. அவரது தோல்வி அவருக்கு முன்கூட்டியே தெரிந்ததால்தான் அவர் விலகிக் கொண்டார்.

வைகோவும், அவர் சார்ந்த கூட்டணிகளும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. மக்கள் நம்பிக்கையில்லாத கூட்டணி அது. நிராகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து போட்டியிடுகிறார்கள். இவர்கள் வெற்றி பெறப் போவதில்லை.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.

Leave a Reply