- செய்திகள், விளையாட்டு

வெளி நாட்டில் அடுத்த ஐபிஎல்?

 

புதுடெல்லி, ஏப்.22:-

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை வெளிநாட்டில் நடத்துவது தொடர்பாக ஐபிஎல் அமைப்புக் குழுவினர் ஆராய்ந்து வருவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் அனுராக் தாகுர் தெரிவித்துள்ளார்.
தில்லியில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைமையகத்தில் அவர் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ஐபிஎல் போட்டிகளை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடத்துவது குறித்து ஆராயப்படுகிறது என்றார். எந்த நாட்டில் நடத்துவது அதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக ஐபிஎல் போட்டி இரண்டு முறை வெளிநாட்டில் நடத்தப்பட்டுள்ளது. 2009-ம் சட்டப் பேரவை தேர்தல் காரணமாக அனைத்து போட்டிகளும் தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. 2014-ம் ஆண்டில் முதல் 15 நாள் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் பேசிய அவர் புதிதாக இளம் வர்ணனையாளர்களை களத்தில் இறக்கும் வகையில் வர்ணனையாளர்களுக்கான அகாதெமி ஒன்றை நிறுவ தீர்மானித்துள்ளதாகவும் தாகுர் குறிப்பிட்டார்.

Leave a Reply