- செய்திகள், விளையாட்டு

வெளியேறினார் சிந்து சிங்கப்பூர் பாட்மிண்டன்

சிங்கப்பூர், ஏப். 15:-

சிங்கப்பூரில் நடந்துவரும் சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-ம் சுற்றோடு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெளியேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியாவோவிடம் 21-11, 14-21, 14-21 என்ற செட்களில் சிந்து போராடி தோல்வி அடைந்தார். இந்த போட்டி 55 நிமிடங்கள் நடந்தது.

அதேபோல ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா மற்றும் அக்‌ஷய் திவால்கர் ஜோடியை 12-21, 12-21 என்ற செட்களில் இந்தோனேசியாவின் முகமது அசன், ஹென்ட்ரா செய்தாவான் தோற்கடித்தனர். கலப்பு இரட்டையர் பிரிவில் சீனாவின் சென், மா ஜின் ஜோடியிடம் 15-21, 19-21 என்ற செட்களில் போராடி வீழ்ந்தனர் இந்தியாவின் பிரணவ், சிக்கி ரெட்டி ஜோடி.

Leave a Reply