- செய்திகள், விளையாட்டு

வெளிநாட்டு வீரர்கள் பலர் விருப்பம் பாக். அணி பயிற்சியாளர்

கராச்சி, ஏப். 27:-

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு வெளிநாட்டைச்  சேர்ந்த முன்னாள் வீரர்கள் பலர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் செய்துள்ளனர்.

பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்ய நேற்றுமுன்தினம் கடைசி என்பதால், இங்கிலாந்தின் பீட்டர் மூர், தென் ஆப்பிரிக்காவின் மிக்கி ஆர்தர், ஆஸ்திரேலியாவின் டீன்ஜோன்ஸ், டாம் மூடி, ஜேமி சிடன்ஸ் ஆகியோர் விண்ணப்பங்கள் வந்தன. மேலும்,  பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் சிலரும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்துள்ளனர்.

இதில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் பீட்டர் மூர்  தனது அறிக்கையில், பாகிஸ்தான் அணியை எதிர்காலத்தில் எப்படி கட்டமைப்பது குறித்த சிறப்பான விளக்கம் அளித்துள்ளார் என்பதால், அவரே பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று வாரியத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்த பீட்டர் மூர் உலகக்கோப்பைப் போட்டியில் அணி தோல்வி அடைந்தவுடன், அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இதற்கிடையே தற்போது பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்படும் ஜிம்பாப்வேயின் கிராண்ட் பிளவர் செப்டம்பர் மாதம் வரை அப்பதவியில் நீடிப்பார் என்றும், அவரை நீட்டிப்பது வரும் தலைமை பயிற்சியாளர் முடிவைப் பொறுத்து அமையும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply