- செய்திகள், விளையாட்டு

வெற்றி காத்திருக்கிறது-ஜாகீர்கான்

 

கொல்கத்தா, ஏப். 12‘-

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோற்றாலும் கூட தங்கள் அணிக்கு வெற்றி காத்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார் டெல்லி டேர் டேவில்ஸ் அணியின் காப்டன் ஜாகீர்கான்.

கொல்கத்தாவில் நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியில் டெல்லி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாகீர் கான், கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோற்ற நாள் டெல்லி அணிக்கு ஒரு மோசமான நாள். அவ்வளவுதான்.  ஆனால் நல்ல விஷயங்கள் இன்னும் நடக்க இருக்கிறது என்றும் தங்கள் அணிக்கு வெற்றி காத்திருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

ஐபிஎல் போட்டியில் இன்னும் நிறைய ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன என்றும் தற்போது எதைப் பற்றியும் நினைக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

தங்கள் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள் என்றும் தங்களது அணிக்கு நல்ல வாய்ப்பு காத்திருக்கிறது என்றும் ஜாகீர் குறிப்பிட்டார்.

Leave a Reply