- செய்திகள், மகளிர்

வெங்காயத்தாள்

 

சாலடில் சேர்க்க வெங்காயத்தாளின் தேவை இன்று அதிகமாக இருக்கிறது.
இதில் அதிகளவு கந்தக சத்தும், வைட்டமின்கள், தாது உப்புக்கள் மற்றும், நார்ச்சத்தும் இருப்பதால் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் பெருங்குடல் புற்றுநோய் வருவதர்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
கண் தொடர்பான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வைத் தருகிறது.
கொழுப்பைக் குறைப்பதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதுடன் இதய நோய் வரவிடாமல் தடுக்கிறது.
வெங்காயத்தாளில் உள்ள குரோமியம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்துகிறது.  சர்க்கரை நோயாளிகள் இதனை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டியது அவசியம்.
உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரக்கூடியது தினமும் உணவில் சேர்த்து வருவதன் மூலம், பல்வேறு நோய்கள் நம்மை நெருங்கவிடாமல் செய்யலாம்.
வெங்காயத்தாளை சிறு துண்டுகளாக காய்கறி சாலடில் சேர்த்து சாப்பிடலாம். நீர் மோரில் நறுக்கி, உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து அருந்தலாம். சாம்பாரில் சேர்ப்பதன் மூலம் சுவையும், மனமும் அபாரமாக இருக்கும்.

Leave a Reply