- செய்திகள்

வீராங்கனைகளுக்கு பிரமர் மோடி பாராட்டு ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடிய…

புதுடெல்லி, ஆக. 29-

ரியோ ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர் – வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி தனது வானொலி உரையில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மான் கி பாத்

ரியோ ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர் – வீராங்கனைகளுக்கு பிரதமர் மோடி தனது வானொலி உரையில் பாராட்டு தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்றும் மான் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலை அவர் ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றினார்.அப்போது அவர் பேசியதாவது:

சல்யூட்

ஒலிம்பிக் போட்டியில் நமது வீரர் – வீராங்கனைகள் சிறப்பாக விளையாடினர். நம் நாட்டு பெண்கள் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு பெருமை தேடி தந்துள்ளனர். சிந்துவின் பயிற்சியாளர் கோபிசந்துக்கு சல்யூட். ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் நமது வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடினர். ஒலிம்பிக் போட்டியில் வென்ற சிந்து, சாக்‌ஷிக்கு வாழ்த்துக்கள். நமது நாட்டின் மகள்கள் நாங்கள் யாருக்கும் எந்தவகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply