- செய்திகள்

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள்: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 144 தடை உத்தரவு மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

சென்னை, ஜூலை.11-
வீரன் அழகுமுத்து கோனின் பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு இன்று (திங்கட்கிழமை) 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
144 தடை உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கட்டாலங்குளத்தில், வீரன் ்அழகுமுத்துக்கோன் 306-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வகையிலும் சட்டம்-ஒழுங்கை பராமரித்திடவும்  தூத்துக்குடி மாவட்டத்தில், இன்று (திங்கட்கிழமை) காலை 5 மணியில் இருந்து நாளை (செவ்வாய்க்கிழமை)காலை 5 மணி வரை குற்றவியல் நடைமுறைச்சட்ட பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, கட்டாலங்குளம் பகுதியில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கும், 5 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும், கட்டாலங்குளத்தில் இருந்தும் பிற பகுதிகளில் இருந்தும் விழாவில் கலந்துகொள்ளும் பொதுமக்கள் வாள், சுருள் ்கத்தி, கம்பு, வேல்கம்பு, குச்சி, கற்கள் மற்றும் பிற அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்படுகிறது.
பாதுகாப்பு ஏற்பாடு

தடை உத்தரவில் இருந்து பள்ளி, கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சரக்கு வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் இறுதிச்சடங்கு ஊர்வலங்ளுக்கு இந்த தடை உத்தரவு பொருந்தாது.

வீருன் அழகுமுத்துக்கோனின் 306-வது பிறந்த நாள் விழா அமைதியான முறையிலும், சீரும் சிறப்புமாகவும் நடைபெற மாவட்ட காவல் ்துறையின் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் அறிவிப்பில் கூறி உள்ளார்.

Leave a Reply