- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

வீட்டை இடித்த வழக்கறிஞர் கைது

அம்பத்தூர், மார்ச் 7:-
சென்னை அடுத்த மதுரவாயல் எம்.எம்.டி காலனியில் வசிப்பவர் அன்சாரி இவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் ஆக பணியாற்றி வருகிறார். இவர் திருமுல்லைவாயல் அனுமன் நகர் கர்க்கஞ்சி தெருவில் ஓராண்டுக்கு  முன்பு ஒரு கிரவுண்ட் இடம் வாங்கி  உள்ளார். அந்த மனையில் வீடு கட்ட அதை சமன்படுத்தி உள்ளார். இதற்கிடையில், பக்கத்து மனையில் வசிக்கும்  மாரியப்பன் என்பவரிடம் தன்னுடைய மனையில் வீடு கட்டி உள்ளதாக கூறி, வட்டாச்சியர் காவல் துறை அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல்  மாரியப்பன் வீட்டின் ஒரு பகுதியை இடித்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மாரியப்பன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்  பெயரில் திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அன்சாரியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply