- செய்திகள், வணிகம்

வீட்டுக்கே வரும் பெங்காலி ஸ்வீட்ஸ் மவுஸை கிளிக் செய்தால் போதும்

கொல்கத்தா, டிச.11:-
வீட்டுக்குள்ளே இருந்து கொண்டு நினைத்த பொருட்களை வாங்கும் வசதியை ஆன்லைன் வர்த்தகம் நமக்கு கொடுத்து விட்டது. அந்த வகையில்  பாரம்பரிய பெங்காலி ஸ்வீட்ஸை இனி நாம் ஆன்லைனிலும் வாங்கலாம்.
சுவை
கொல்கத்தா என்றவுடன் நம் முதலில் நம் நினைவுக்கு வருவது பராம்பரிய சுவைமிக்க பெங்காலி ஸ்வீட்ஸ்தான்.  ஒரு முறையாவது அந்த பதார்த்தங்களை சுவைத்து பார்த்து விடும் ஆசை நம்மில் பலருக்கு உண்டு. இந்த ஆசையை பூர்த்தி செய்யும் வகையில் ஆன்லைனில் வந்து விட்டது பெங்காலி ஸ்வீட்ஸ். www.amaderrangamati.com என்ற புதிய வலைதளத்தில் ஆர்டர் செய்தால் போதும் நம் வீடு தேடி வரும் பெங்காலி ஸ்வீட்ஸ். அமதர்ரங்கமதி நிறுவனத்தின் செயல் இயக்குனர் இது குறித்து கூறுகையில், ` மனோகரா, சர்பூரியா, பட்டிஸ்பட்டா உள்பட 15 பாரம்பரிய பெங்காலி ஸ்வீட்சுடன் நாங்கள் விற்பனை தொடங்க திட்டமிட்டுள்ளோம். எதிர்காலத்தில் ஸ்வீட்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். கொல்கத்தாவில் மட்டுமல்ல உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நீங்கள் ஆர்டர் செய்தால் உங்கள் வீடு தேடி பெங்காலி ஸ்வீட்ஸ் வரும். கிலோ ரூ.200 முதல் ரூ.900 வரையிலான மதிப்பில் விதவிதமான  ஸ்வீட்ஸ் உள்ளன.  இந்த வலைதளத்தில் பெங்காலி ஸ்வீட்ஸ் தவிர பல்வேறு வகையான பெங்கால் கைவினை பொருட்களும் விற்பனை செய்யப்படும்' என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply