- செய்திகள், மாவட்டச்செய்திகள்

வீட்டில் மனைவியுடன் தூங்கி கொண்டிருந்த வாலிபர் வெட்டிக்கொலை பெரம்பலூர் அருகே பயங்கரம்

பெரம்பலூர்,மார்ச் 26-
வீட்டில் மனைவியுடன் தூங்கி கொண்டிருந்த வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த பயங்கர சம்பவம் பெரம்பலூர் அருகே நடந்துள்ளது.
வாலிபர் வெட்டிக்கொலை
பெரம்பலூர்  மாவட்டம் குன்னம் அருகே உள்ள திம்மூர் கிராமத்தை சேர்ந்தவர்  முத்துகண்ணு-பச்சையம்மாள்.இவர்களின்  இளைய மகன் முருகானந்தம்(வயது31),  சிங்கப்பூர் சென்று ஊர் திரும்பிய இவருக்கும் பக்கத்து ஊரான அல்லிநகரம்  கிராமத்தை சேர்ந்த சுவித்ரா(21) என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம்  29-ந் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து  திம்மூரிலிருந்து அருணகிரிமங்களம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள  விவசாய நிலத்தில் வீடு கட்டி தந்தை மற்றும் மனைவியுடன் முருகானந்தம் வசித்து  வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல், வீட்டில் ஒரு  அறையில் மனைவியுடன் முருகானந்தம் தூங்கி கொண்டிருந்தார். அவரை நேற்று அதிகாலை மர்ம  நபர்கள் சிலர் சரமாரியாக வெட்டி கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
போலீஸ் விசாரணை
இச்சம்பத்தின் போது சத்தம் கேட்டு எழுந்த அவரது  மனைவி சுவித்ரா கூச்சலிட்டு, அக்கம் பக்கம் இருந்தவர்களை வரவழைத்து சம்பவம் குறித்து  தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து அப்பகுதி பொது மக்கள் அளித்த தகவலின்  பேரில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சோனல்சந்திரா தலைமையில், குன்னம் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று  கொலை செய்யப்பட்டு கிடந்த முருகானந்தத்தின்  உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.
கருத்து வேறுபாடு
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில்  சுவித்திராவுக்கு அடிக்கடி செல்போன் அழைப்பு வருவதால், கனவன்- மனைவி இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டு குடும்ப தகராறு இருந்து வந்ததும். இதனால்  மனமுடைந்த சுவித்திரா அடிக்கடி கோபித்து கொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு செல்வதும், பின்னர் முருகானந்தம் சமாதானம்  செய்து அழைத்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
மனைவிக்கு தொடர்பா?
கொலை சம்பவம் நடந்த போது முருகானந்தத்தின் மனைவி  சுவித்திரா உடனிருந்ததால், கொலை சம்பவத்தில் இவருக்கும் தொடர்பிருக்கலாம்  என்ற கோணத்தில் சுவித்திராவை அழைத்து, குன்னம் போலீசார் விசாரணை  மேற்கொண்டு வருகிறார்.

Leave a Reply