- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

வீடூர் அணையில் இருந்து பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறப்பு

சென்னை, ஜன.20-
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று (புதன் கிழமை) முதல் தண்ணீர் திறந்து விட, முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வீடூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, விழுப்புரம் மாவட்டம், வீடூர் அணையிலிருந்து  பாசனத்திற்காக 20-ந் தேதி (இன்று) முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வீடூர் அணையின்கீழ் உள்ள 3,200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியிருக்கிறார்.

Leave a Reply