- சென்னை, செய்திகள்

” வீடுகள் தோறும் அகல் விளக்கு ஏற்றி வீர சபதம் ஏற்போம்” ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர் உறுதி

” வீடுகள் தோறும் அகல் விளக்கு ஏற்றி வீர சபதம் ஏற்போம்” என ஜெயலலிதாவின் நினைவிடத்தில் முதல்வர் உறுதி மொழி ஏற்றார். முதல்வரின் வேண்டுகோளுக்கு ஏற்ப, ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி மாலை 6 மணிக்கு ஜெயலலிதா படத்தின் முன்பு அகல் விளக்கேற்றி அவரது லட்சியம் கனவுகளை சாத்தியமாக்கிட தொண்டர்கள் வீரசபதம் ஏற்றனர்.

நேற்று மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் அங்கு உறுதிமொழியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் படிக்க, அனைவரும் அதனை திருப்பி சொல்லி ஏற்றனர்.

முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, வெற்றித் திருமகளாம் புரட்சித் தலைவி அம்மா மறைவுற்ற இந்நாளில், அவர்தம் திருவுருவப் படத்திற்கு 5.12.2020 – சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் விளக்கேற்றி வைத்து, தமிழகத்து மக்களை நெஞ்சில் சுமந்து, நம் தன்னிகரில்லா அம்மா சேமித்து வைத்திருந்த கனவுகளையும், லட்சியங்களையும் சத்தியமாக்கிட; சாத்தியமாக்கிட அகல் விளக்கு ஏற்றி வைத்து அம்மாவின் திருவுருவ படத்தின் முன்னே வீர சபதம் எடுப்போம்., குடும்ப ஆட்சி ஏற்படாதவாறு உறுதி ஏற்போம் என்று கூறினார்.

இதை தொடர்ந்து தொண்டர்கள் நேற்று மாலை 6 மணிக்கு ஜெயலலிதா படத்தின் முன்பு அகல் விளக்கேற்றி அவரது லட்சியம் கனவுகளை சாத்தியமாக்கிட வீரசபதம் ஏற்றனர்.

Leave a Reply