- செய்திகள், விளையாட்டு

விஸ்வநாதன் ஆனந்துக்கு ஹிருத்யனாத் விருது

 

மும்பை, ஏப்.6:-
பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு ஹிருத்யனாத் விருது வழங்கப்பட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்த பிரபல இசை அமைப்பாளரும் பாடகருமான ஹிருத்யனாத் பெயரிலான விருது, ஒரு துறையில் சிறப்பாக செயலாற்றுபவர்களுக்கு வழங்கப்படுதிறது. அந்த வகையில் செஸ் போட்டியில் சிறந்து விளங்கும் தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது ரூபாய் 2 லட்சம் பரிசுத் தொகை கொண்டதாகும். பிரபல பாடகிகள் லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே இருவரும் ஹிருத்யனாத்தின் சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 12-ம் தேதி மாநில ஆளுநர் வித்யா சாகர் ராவ் தலைமையில் இந்த விருது அளிக்கப்பட்ட உள்ளது.

இதற்கு முன்னதாக இந்த விருதை லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே, அமிதாப் பச்சன், ஏ.ஆர். ரஹ்மான், ஹரிபிரசாத் சௌராசியா, பாபாசாகேப் புரந்தரே உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.

விருதளிக்கும் நிகழ்ச்சியில் மகாராஷ்டிர மாநில கலாச்சாரத்துறை அமைச்சர் வினோத் தவ்டே, ஹிர்த்யனாத் மங்கேஷ்வர், இந்தி நடிகர் அமீர் கான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளனர்.

47 வயது நிரம்பியுள்ள ஆனந்த் 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். செஸ் போட்டியில் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றவர் இவரே.

Leave a Reply