- சினிமா, செய்திகள்

விஷால் நடிக்கும் மிஷ்கின் படம்

டைரக்டர் மிஷ்கின் இப்போது சவரக்கத்தி படத்தை இயக்கி வருகிறார், இந்தப் படத்தை முடித்ததும் விஷால் படத்தை இயக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. இதற்கேற்ப லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க இருந்த `சண்டக்கோழி-2' படம் கைவிடப்படுவதாக விஷால் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த தகவல் கோடம்பாக்கத்தில் உலா வரத் தொடங்கி விட்டது. ஏற்கனவே மிஷ்கின் சொல்லியிருந்த கதைக்கு ஓ.கே. சொல்லியிருந்த விஷால், தற்போது நடித்து வரும் `மருது' படத்தை முடித்ததும் இந்தப் படத்தில் நடிப்பார் என்கிறார்கள்.

Leave a Reply