- செய்திகள், நாகபட்டினம், மாவட்டச்செய்திகள்

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் காவிரி டெல்டா விவசாயிகள் கோரிக்கை…

நாகப்பட்டினம், ஏப்.4-
தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் வருகிற 5-ந்தேதி அன்று விவசாயக் கடன்களை அரசு ஏற்று விவசாய கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி ரெயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், விவசாயிகளின் விவசாய கடனை அரசு ஏற்று தள்ளுபடி செய்ய வேண்டும்  என காவிரி டெல்டா விவசாயிகள் பாதுகாப்புச் சங்க தலைவர் தனபால் கோரிக்கை வைத்துள்ளார்.
அனைத்துக் கட்சிக் கூட்டம்
நாகையில் நேற்று விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் அனைத்து அரசியல் கட்சியினர் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தே.மு.தி.க –ஜனநாயகக் கூட்டணியினர், காங்கிரஸ், தி.மு.க மற்றும் 94 விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் வருகிற 5-ந்தேதி விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வருகிற 5-ந்தேதி அன்று ரெயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
கடன் மீட்பு
இதுதொடர்பாக காவிரி விவசாயிகள் டெல்டா விவசாயிகள் சங்கத்தின் தலைவர் தனபால் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகம் முழுவதும் விவசாயிகள் வாங்கிய கடன் தொகையினை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் தற்கொலைகள் தொடர்கின்றன. இந்த நிலையில் விவசாயிகள் விவசாயத்திற்காக கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகள், விவசாய தங்கநகைக் கடன் ஆகியவைகளை வாங்கி உள்ளனர். அவற்றை உடனடியாக கடன்மீட்பு செய்யும் வகையில் அரசே ஏற்று கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.

Leave a Reply