- செய்திகள், மாவட்டச்செய்திகள், விழுப்புரம்

(விழுப்புரம்)மாநில உயர்மட்ட குழு கூட்டம் அரசு டாக்டர்கள் சங்கத்தின்…

விக்கிரவாண்டி, ஏப். 11-
விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கத்தில் உள்ள, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில், அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்க உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க மாநில தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் டாக்டர் ராமலிங்கம், மாநில செயலாளர் டாக்டர் சாமிநாதன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் டாக்டர் அன்புமணி வரவேற்றார். இதில் தமிழக அரசு டாக்டர்களுக்கு, மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வழங்கவேண்டும், கடலூர் ராஜா முத்தையா பல்கலை கழகத்தை, அரசு மருத்துவ கல்லூரியக மாற்ற வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  இதில் மாவட்ட செயலாளர் அருண்சுந்தர், டாக்டர் மணிவண்ணன் மற்றும் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படவிளக்கம்
விக்கிரவாண்டி அருகே முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் சார்பில் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது.

Leave a Reply