- செய்திகள், மகளிர்

விளக்கெண்ணெய் கை வைத்தியம்

விளக்கு எரியவைக்கவும், மருந்தாகவும் பயன்படுகிறது விளக்கெண்ணெய்.  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றை சுத்தப்படுத்தும் சூப்பர் மருந்து.
* வயிற்றை சுத்தப்படுத்த, 5 முதல் 10மி.லி வரை குடிக்கலாம்.
* தீப்புண், காயத்தின் மேல் விளக்கெண்ணெயை தடவ, சீக்கிரத்திலேயே ஆறிவிடும்.  மூட்டுவலிகள், தசைபிடிப்பு மற்றும் தசை வலிகள், முதுகு வலி இருந்தால் இந்த எண்ணெயை தடவினால் சட்டென வலிகள் நீங்கும்.
* விளக்கெண்ணெயில் உள்ள ரிசினோலிக் ஆசிட் என்னும் வேதிப் பொருளின்  சரும பிரச்னையிலிருந்து விடுபட வைக்கும்.  சிறிது விளக்கெண்ணெயை தினமும் உதட்டின் மீது தடவி வரலாம்.  உதடு வறட்சி நீங்கும்.
* பிரசவ வலியைத் தூண்டி பிரசவத்தைத் துரிதப்படுத்த 120 மி.லி வரை கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுக்கலாம்.
*  படுக்க போகும் முன் கண்களைச் சுற்றிலும் சிறிது விளக்கெண்ணெய் விட்டு நன்றாக மசாஜ் செய்து கொண்டால் நன்றாக தூக்கம் வரும்.  கருவளையம் மறையும், கண்கள் குளிர்ச்சியாகும்.

Leave a Reply