- செய்திகள், விளையாட்டு

வில்வித்தையில் 3 தங்கம் வென்றது இந்தியா

 

தெற்காசியப் போட்டியின் வில்வித்தை விளையாட்டில் இந்திய வீரர், வீராங்கனைகள் நேற்று நடந்த போட்டியில் 3 தங்கங்களை வென்றனர்.

வில்வித்தையின் ரிகர்வ் என்ற பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி,  லட்சுமி ராணி மாஜி,  பம்பயாலா தேவி உள்ளிட்டோர் 6-0 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி தங்கத்தை வென்றனர்.

ஆடவர் பிரிவில் இந்தியாவின் தருண்தீப், குருசரண் பெஸ்ரா, ஜெயந்த் தலுக்தர் ஆகியோர் 5-1 என்ற கணக்கில் இலங்கை அணியை வீழ்த்தி தங்கம் வென்றனர்.

கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராய், தீபிகா ஜோடி 6-0 என்ற கணக்கில் வங்கதேசத்தின் சோஜெப் ஷேக்,  பியூட்டி ரேயை வென்று தங்கத்தைக் கைப்பற்றியது.

Leave a Reply