- சினிமா, செய்திகள்

வில்லனாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்… ரஜினி அட்வைஸ் ேகட்டு ‘எந்திரன்’ வாய்ப்பை தவிர்த்த அமிதாப்…

மும்பை, ஜன. 4:-

வில்லனாக நடித்தால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று ரஜினி அறிவுறுத்தியதால், ‘எந்திரன்’ படத்தில் வில்லனாக நடிக்க வந்த அழைப்பை மறுத்துவிட்டதாக பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் மனம் திறந்து கூறியுள்ளார்.

எந்திரன் படம்

2010-ம் ஆண்டு சங்கர் இயக்கத்தில், ரஜினி காந்த் கதாநாயகனாக நடித்து வெளியான பிரமாண்ட படம் ‘எந்திரன்’. இதில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். வில்லன் கதாப்பாத்திரத்தில் இந்தி நடிகர் டேனி டென்சோங்பா நடித்துள்ளார். பெரும் வெற்றி பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது.

அமிதாப்புக்கு அழைப்பு

இந்த நிலையில் ‘எந்திரன்-2’ படத்தில் நடிக்க அமதாப் பச்சனிடம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமிதாப் பச்சன், இது பற்றி கூறியதாவது:-

சங்கர் என்னை அழைத்தார். எந்திரன் படத்தில் வில்லனாக நடிக்க வேண்டும் என்று அவர் கேட்டார். உடனே நான் ரஜினியை போனில் அழைத்து பேசினேன். அப்போது ‘உங்களை வில்லனாக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் நடிக்க வேண்டாம்’ என்றார். அவர் சொன்னதற்கு ‘சரி’ என்று கூறினேன். அதனால் எந்திரனில் நான் நடிக்கவில்லை.

ஆனால் தற்போது எந்திரன் 2-ம் பாகத்தில் நடிக்க எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply