- உலகச்செய்திகள், செய்திகள்

விலகினார் பென் கார்சன் அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்

வாஷிங்டன், மார்ச், 6:-

அமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகுவதாக  குடியரசுக் கட்சி வேட்பாளர் ெபன் கார்சன்  அறிவித்துள்ளார்.

இதையடுத்து, குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப், டெட் குரூஸ், மார்க்கோ ரூபியா, ஒகியா கவர்னர் ஜான் காசிச் ஆகிய 4 பேர் மட்டுமே வேட்பாளர் களத்தில் உள்ளனர். கடந்த மார்ச் 1-ந்தேதி நடந்த சூப்பர் டியூஸ்டே தேர்தலில் பென் கார்சன் மிக மோசமாக தோல்வி அடைந்தார். இதையடுத்து போட்டியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து பென் கார்சன் நிருபர்களிடம் நேற்றுமுன்தினம் கூறியதாவது: என்னை அதிகம் விரும்பும் மக்கள் கூட இந்த தேர்தலில் எனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். ஆதலால், நான் அதிபர் வேட்பாளர் தேர்தல் பிரசாரத்தில் இருந்து விலகுகிறேன். ஆனால், தொடர்ந்து அமெரிக்காவின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் உழைப்பேன் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply