- சினிமா, செய்திகள்

விருது பெற்ற இயக்குனருடன் இணையும் நகுல்

 

பிரபல மலையாள இயக்குனர் கோபாலன் மனோஜ் நடிகர் நகுலை இயக்கும் புதிய படத்தை தொடங்கி விட்டார்கள். படத்தில் நகுலின் ஜோடியாக நடிப்பவர் பிரபல இந்தி நடிகை ஆஞ்சல். இவர் பிரபல இந்தி இயக்குனர் கரண்ஜோகரின் கண்டு பிடிப்பு. `ஆரஷான்' என்ற படத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்தவர். சாரதி படத்துக்கு தேசியவிருது பெற்ற ராஜேஷ் கே.ராமன் கதை, திரைக்கதை, வசனம் எழுத, ஒளிப்பதிவை சதீஷ் கவனிக்கிறார். நிதின்லோபஸ் இசையமைக்கிறார்.
படத்தின் இயக்குனர் கோபாலன் மனோஜ் `வயலின்' என்ற டெலிபிலிமுக்காக தேசியவிருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது முதல் படமான சாரதியை அதன் கதைக்காக இப்போது வரை கேரள விழாக்களில்  பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
படம் பற்றி நகுல் கூறும்போது, “இயக்குனர் உள்ளிட்ட மொத்த டீமும் ஏற்கனவே சாதித்தவர்கள். அவர்கள் படத்தில் எனக்கும் ஒரு வாய்ப்பு அமைந்தது என் பொறுப்பை அதிகமாக்கி இருக்கிறது'' என்கிறார்.

Leave a Reply