- விளையாட்டு

விராத் கோலிதான் கேப்டன்

ஆர்.சி.பி. அணிக்கு விராத்கோலிதான் கேப்டன் என ஆர்.சி.பி. சேர்மன் கூறினார். ஏழு முறை ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்துள்ள விராத் கோலியால் இரண்டு முறை மட்டுமே அணியை பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் எட்டு அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஒன்று. தற்போது இந்திய அணி கேப்டனாக இருக்கும் விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டனாக உள்ளார்.கடந்த ஏழு சீசனில் விராட் கோலி கேப்டனாக இருந்துள்ளார்.

அவரது தலைமையில் ஆர்சிபி 5, 7, 3, 2-வது இடம், 8-வது இடம், 6-வது இடம், 8-வது இடம் பிடித்துள்ளது.இதனால் ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி நீடிப்பாரா? என்ற கேள்வி கூட எழுந்தது. இந்த நிலையில் ஆர்சிபி அணியின் சேர்மன் சஞ்சீவ் சுரிவாலா கூறுகையில் ‘‘விராட் கோலி இந்திய அணி கேப்டன். மிகவும் அதிக ரசிகர்களை கொண்டவர். நாங்கள் விராட் கோலியை விரும்புகிறோம்.

விராட் கோலியுட் இணைந்து செயல்பட விரும்புகிறோம்.விளைாட்டை பொறுத்த வரைக்கும் சில நேரங்களில் தோல்வியடையலாம், சில நேரம் வெற்றி பெறலாம், ஆனால் தனிப்பட்ட முறையில் விராட் கோலியின் சாதனையை மறந்துவிட முடியாது.ஒரு சிறப்பான லெவன் அணியை உருவாக்க முடியும் என்ற எண்ணத்தில் 21 வீரர்களை பெற்றுள்ளோம். ஒவ்வொரு வீரர்களும் ஆடும் லெவன் அணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அர்த்தமுள்ள பங்கை அளிப்பார்கள்’’ என்றார்.

Leave a Reply