- செய்திகள், விளையாட்டு

விராத் கோலிக்கு அபராதம்

 

துபாய், பிப். 29:-

வங்காளதேசத்தில் நடந்து வரும் ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வரும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராத் கோலிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. அப்போது, 15-வது ஒவரில் விராத் கோலிக்கு எல்.பி.டபில்யு வழங்கி நடுவர் ருச்சிரா  தீர்ப்பளித்தார். அப்போது, நடுவரின் தீர்ப்பை மதிக்காமல் விராத் கோலி ஆடுகளத்திலேயே சிறிது நேரம் நின்று இருந்தார்.

மேலும், ஆடுகளத்தை விட்டுச் செல்லும் போது, நடுவரைச் பேட்டால் சுட்டிக்காட்டி, ஏதோ திட்டிக்கொண்டு கோலி சென்றார். இதுபோட்டியின் நன்னடத்தை, ஒழுக்கநெறிக்கு மாறானதாகும். இதையடுத்து, களநடுவர்கள் ருச்சிரா, சர்புதுல்லா ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் மூன்றாவது நடுவர்கள் கோலியின் பேச்சை ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, ஐ.சி.சி.போட்டி ஆய்வு நடுவர்கள் ஜெப் குரோவ் முன்பு கோலி ேநற்று ஆஜரானார். நடுவரை எதிர்த்து பேசியதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை கோலி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, கோலிக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 30 சதவீதத்தை அபராதமாக விதித்து ஜெப் குரோவ் உத்தரவிட்டார்.  மேலும், குற்றத்தை கோலி ஒப்புக்கொண்டதையடுத்து மேல்விசாரணை தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply