- சென்னை

விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் முடிவை திரும்ப பெறவேண்டும்

விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் முடிவை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.திரும்ப பெறவேண்டும்தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் ஒருதலைபட்சமான முடிவானது, மாநில அரசிடமிருந்து அதன் உரிமையையும் தன்னாட்சியையும் பறிப்பதாகும்.

இது, விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் எந்தவொரு முடிவும் மாநில அரசுடன் கலந்தாலோசிக்கப்பட்டே எடுக்கப்படும் என்ற 2003-ம் ஆண்டு வழங்கப்பட்ட உறுதியை மீறுவதாகும். இம்முடிவைத் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply