- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

விமானத்தில் பயணி மரணம்

மீனம்பாக்கம், ஏப்ரல் 5:- –
மருத்துவ பரிசோதனைக்காக  கொல்கத்தாவில் இருந்து நேற்று சென்னைக்கு வந்த பயணி ஒருவர் விமானத்தில் உயிரிழந்தார்

கொல்கத்தா பயணி
கொல்கத்தாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேற்று காலை 10.50 மணிக்கு விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி விட்ட நிலையில் ஒரு பயணி மட்டும் தனது இருக்கையை விட்டு எழாமல் இருந்தார். இதையடுத்து, விமான பணியாளர்கள் அவரை பலமுறை எழுப்பியும் பலனில்லாததால் சந்தேகமடைந்த அவர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, அங்கு விமானத் துறை அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் விரைந்து வந்து பரிசோதித்தபோது அந்த பயணி இறந்து விட்டதை கண்டுபிடித்தனர். உடனே விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சர்க்கரைநோய்
தொடர்ந்து நடந்த விசாரணையில் விமானத்தில் இறந்த பயணி கொல்கத்தாவை சேர்ந்த ஷகாதத் அலி (வயது46) என்பதும், அவர் நீண்ட நாட்களாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர் எனவும் தெரியவந்தது. இந்தநிலையில், சர்க்கரை நோய்க்காக சென்னை வெல்லூரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சை பெறநேற்று விமானத்தில் சென்னை வந்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply