விமர்சனம் – கைலா

அது ஒரு மர்ம பங்களா. அதற்குள் பேய் இருப்பதாக சொல்கிறார்கள். அதை நம்பும் விதத்தில் அந்த பங்களாவுடன் தொடர்புடைய 3 பேர் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். அதில் ஒருவர் போலீஸ் இன்ஸ்பெக்டர். இதனால் போலீஸ் விசாரணை நடத்துகிறது. இந்த நிலையில் அந்த பேய் பங்களாவில் நிஜமாகவே பேய் இருக்கிறதா என ஆராய்ச்சி செய்ய வெளிநாட்டில் இருந்து தானா என்ற பெண் எழுத்தாளர் அந்த பங்களாவுக்கு தனது தோழிகளுடன் வருகிறார் .முடிவு என்ன ஆகிறது மீதி கதை.
படத்தின் கதை வசனம் எழுதி இயக்கி இருப்பதோடு வில்லனாகவும் நடித்து இருக்கிறார், பாஸ்கர் னிவாசன்..வெளிநாட்டு பணம் இந்தியாவில் எப்படி கை மாறுகிறது என்பது தான் கதை. அதை பேய் பங்களாவோடு இணைத்து சொல்லி இருப்பது புதுசு. அருமையான கரு. அதை எடுத்து இருக்கும் விதம் தான் இடிக்கிறது. . நாடகம் பார்த்த மாதிரி இருக்கிறது.வில்லன் நடிப்பில் பாஸ்கர் னிவாசன் அருமை. ‘‘ஆ ஊ‘‘ என்ற அலட்டல் இல்லாமல் முக பாவனை மூலமே வில்லதனத்தை வெளிபடுத்தி இருக்கிறார். இனி இவரை தேடி வரும் வில்லன் வேடம்.பேய் பங்களாவாசியாக கவுசல்யாவும், அவரது மகளாக சிறுமி கைலாவும் வருகிறார்கள்.பேயை ஆராய்ச்சி செய்யும் எழுத்தாளராக தானா நாயுடு. பயத்தை கண்களிலேயே வெளிபடுத்தி இருப்பது சிறப்பு. இறுதியில் கொலைகாரி இவர்தான் என தெரிய வரும் போது இயக்குனருக்கு சபாஷ் போடலாம்.

கைலா – ஓகே.




One thought on “விமர்சனம் – கைலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *