- செய்திகள், தஞ்சாவூர், மாவட்டச்செய்திகள்

விபத்தில் இறந்த ஆசிரியர் குடும்பத்துக்கு ரூ.49 லட்சம் நஷ்ட ஈடு தஞ்சை நீதிமன்றம் உத்தரவு…

தஞ்சை, மார்ச் 31-
தஞ்சை – புதுக்கோட்டை சாலை பொதுப்பணித்துறை நகரைச் சேர்ந்தவர் பாண்டித்துரை (52). இவரது மனைவி பார்வதி (40). இவர் தனியார் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2014ம் ஆண்டு பார்வதி தனது மகள் பவுதியுடன் (17) மொபட்டியில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். தஞ்சை குழந்தை ஏசு கோவில் அருகில் சென்றுகொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த தனியார் பஸ், மொபட்டின் மீது மோதியது. இதில் பார்வதி தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
வழக்கு
இதுகுறித்து தஞ்சை போக்குவரத்து விபத்து தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், விபத்தில் பார்வதி இறந்ததற்கு நஷ்ட ஈடு கேட்டு பாண்டித்துரை தஞ்சை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
உத்தரவு
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி பூரனகலா ஜெயஆனந்த் விசாரித்து, விபத்தில் இறந்த பார்வதியின் குடும்பத்திற்கு ரூ.47,25,474மும், காயமடைந்த பவுதிக்கு ரூ.1,84,279மும் என மொத்தம் ரூ.49,09,351 நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டார்.

Leave a Reply