- செய்திகள்

விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக…

திருவள்ளூர்,ஆக 19-
திருவள்ளூர் அருகே, விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக விநாயகர்  சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 5-ந் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி விநாயகர் சிலையை பொது இடங்களில் 2 நாள், 5 நாள், 7 நாட்கள் என வைத்து பூஜிப்பது வழக்கம்.
சிலை செய்யும் பணி
பின்னர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையோரம் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் சாட் பவுடர் மூலம் விநாயகர் சிலைகளை செய்து வருகிறார்கள்.
சுமார் 3 அடி உயரம் முதல் 10 அடி உயரம் வரை சிலைகளை வடிவமைக்கப்படுகிறது. இதில் பாம்பு விநாயகர், சிவன் பார்வதியுடன் விநாயகர், மயில் வாகன விநாயகர், கருட வாகன விநாயகர் உள்ளிட்ட பல வடிவங்களில் சிலைகள் தயார் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
ரூ.20 ஆயிரம் வரை..
சிலைகள் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. தயாராகும் விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி வேகமாக நடந்து வருகிறது.
இதற்கான வண்ணங்கள் ரசாயனக் கலவை இல்லாமல் எளிதில் நீர் நிலையில் கரையக்கூடிய மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் பயன்படுத்துகின்றனர்.
முன்பதிவு
இங்கு தயாராகும் சிலைகளை வாங்க ஏராளமானவர்கள் ஏற்கனவே முன்பதிவு செய்து வைத்து இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply