- மாவட்டச்செய்திகள்

விநாயகர் சதுர்த்தி குறித்த உயர்நீதிமன்ற உத்தரவை அரசு செயல்படுத்தும்

விநாயகர் சதுர்த்தி விழாவில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு செயல்படும் என்றும், மத சார்பான ஊர்வலங்கள் மற்றும் பொதுநிகழ்ச்சிகள் நடத்த மத்திய அரசு நடத்தக்கூடாது என்பதை மாநில அரசு செயல்படுத்துகிறது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர், திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்களின் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-தென்பெண்ணையாறு- பாலாறு இணைப்பு மகளிர் சொந்தக் காலில் நிற்க வேண்டுமென்பதற்காக ஜெயலலிதா காலத்திலேயே மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிகளவில் வங்கிக் கடனுதவிகள் வழங்கப்பட்டது. பொன்னை ஆற்றின் குறுக்கே ரூபாய் 12.93 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டிலுள்ள அனைவருக்கும் முகக்கவசங்கள் வழங்க வேண்டுமென அரசு முடிவு செய்து, குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு விலையில்லா தரமான மறு பயன்பாட்டு முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது.2005-ம் ஆண்டே பத்தலப்பள்ளியில் அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, பல்வேறு காரணங்களினால் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, அமைச்சர் வலியுறுத்தியதன் காரணமாக ரூபாய் 122 கோடி மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கான நடவடிக்கை அரசால் மேற்கொள்ளப்படும்.

தென்பெண்ணையாறு, பாலாறு இணைப்புத் திட்டத்தினை (54 கிலோ மீட்டர்) ரூபாய் 648 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு முதற்கட்டமாக அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது. அதிகமான இழப்பீடு கேள்வி : கொரோனா ஊரடங்கால் தமிழ்நாடு அரசிற்கு எவ்வளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது?பதில் : இன்னும் முழுமையான கணக்கு வரவில்லை. அதிகமான இழப்பீடு ஏற்பட்டிருக்கிறது. தொழிற்சாலைகள் இயங்காததால் அரசிற்கு கிடைக்க வேண்டிய வருவாய் பெருமளவு இழப்பு ஏற்பட்டிருந்தாலும், அரசு மக்களுக்குத் தேவையான திட்டங்களை சிந்தாமல், சிதறாமல், எவ்வித தொய்வும் இல்லாமல் செயல்படுத்துகிறது.ஊக்கத்தொகை கேள்வி : கொரோனா தொற்றினால் இறக்க நேரிட்டால் 5 லட்சம் ரூபாயும், கொரோனா காலத்தில் பணிபுரிவதற்காக ஊக்கத் தொகையாக 3 ஆயிரம் ரூபாயும் வழங்கியிருக்கிறீர்கள். இந்த ஊக்கத்தொகை தொடர்ந்து வழங்கப்படுமா?பதில் : ஊக்கத் தொகை கொடுக்கலாம் என்ற பரந்த எண்ணம் இருக்கின்றது. ஆனாலும், போதிய அளவு நிதி ஆதாரம் இல்லாததால் கொடுக்க இயலவில்லை.

நிதி ஆதாரம் தேவையான அளவிற்கு கிடைத்த பிறகு நீங்கள் வைத்த கோரிக்கை பரிசீலிக்கப்படும். நீதிமன்ற உத்தரவு கேள்வி: விநாயக சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதித்து இருக்கிறீர்கள். டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதித்த போது, விநாயக சிலைகளுக்கு அனுமதி இல்லையா?பதில்: நேற்றைய தினமே உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது. உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி அரசு செயல்படும். ஏற்கனவே மத்திய அரசாங்கம் சில வழிகாட்டு முறைகளை அறிவித்திருக்கின்றது. ஊரடங்கு சட்டம் அமல்படுத்தும்பொழுது என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. மதத்தின் சார்பாக ஊர்வலங்களோ, பொது இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதை அரசு நடைமுறைப்படுத்துகிறது.

கேள்வி : கொரோனா நோயாளிகளுக்கு உணவிற்காக ஒரு நாளைக்கு எவ்வளவு செலவிடப்படுகிறது? பதில்: மொத்தமாக, ஒரு நாளைக்கு சுமார் 20 முதல் 23 கோடி ரூபாய் செலவாகிக் கொண்டிருக்கிறது. அது மாவட்டங்களில், அந்தந்த இடங்களிலுள்ள விலை ஏற்றத் தாழ்வுகளுக்கு ஏற்றாற் போல மாறுகிறது. நடவடிக்கை கேள்வி : ரேஷன் கடைகளில் வழங்கப்படும் முகக்கவசங்கள் தரமற்றதாக உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளதே?பதில்: ஒப்பந்த அடிப்படையில் ஒப்பந்தப் புள்ளி அறிவிக்கப்பட்டு முறையாக அந்தத் துறை பரிசீலித்து சோதனை செய்துதான் பெற்றிருக்கிறார்கள்.

அப்படி ஏதாவது புகார் வந்தால் அதை அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்.நதிகள் இணைப்பு கேள்வி : நதிகள் இணைப்பைப் பற்றி?பதில்: நதிகள் இணைப்பை பொறுத்தவரை, தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறோம். நதிகள் இணைப்புத் திட்டம் என்பது பல்வேறு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை. மத்திய அரசிற்கு கோதாவரி-காவேரி இணைப்புத் திட்டம் செயல்படுத்த வேண்டுமென்றும், நம் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நீர்பாசன திட்டங்களின் நிலவரத்தையெல்லாம் மத்திய அரசிற்கு தெரிவித்திருக்கிறோம் ஜல்சக்தி அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம். மத்திய அரசு, பல்வேறு திட்டங்களில் உதவுவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார். கேள்வி : கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுமா?பதில்: ஏற்கனவே எல்லா மாவட்டங்களிலும் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென்று அரசால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மத்திய அரசு உத்தரவு கேள்வி : எச். ராஜா தெரிவித்த கருத்து குறித்து?பதில் : அவர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர். பா.ஜ.க. அரசாங்கம் அறிவித்த கொரோனா தடுப்பு வழிமுறைகளை தான் அரசு நடைமுறைப்படுத்துகிறது. அவர்கள் அறிவித்த அந்த அறிவிப்பின்படி அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு முதல்வர் கூறினார்.

Leave a Reply