- சினிமா, செய்திகள்

விதியும் மதியும் உல்டாவானால்…

 

`டார்லிங்-2' பட நாயகன் ரமீஸ்ராஜா மீண்டும் நாயகனாக நடிக்கும் படம் `விதி மதி உல்டா'. ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் விஜய்பாலாஜி இயக்குகிறார். “மனித வாழ்வின் நிகழ்வுகள் அனைத்துமே விதிக்குட்பட்டது. விதியை வெல்லக்கூடிய சக்தி மதிக்கு உண்டு. அதுவே உல்டாவாகி விட்டால் என்ன விளைவு ஏற்படும்? இது தான் படத்தின் மையக்கரு. இதை காதல், காமெடி, பேன்டசி இணைப்பில் உருவாக்கி வருகிறோம்'' என்கிறார், இயக்குனர் விஜய்பாலாஜி.
படத்தில் நாயகன்  ரமீஸ்ராஜாவுக்கு  நோடியாக நடிக்கிறார், ஜனனி அய்யர். வித்தியாசமான கதாபாத்திரத்தில் கருணாகரனும் டேனியல் பாலாஜியும் நடித்து வருகிறார்கள். சென்னை, புதுச்சேரி, பெஙகளூர் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
ஒளிப்பதிவை மார்ட்டின்ஜோ கவனிக்க, . இசை(க்கிறார்) அஸ்வின். பாடல்கள் கபிலன். தயாரிப்பு ரமீஸ்ராஜா.

Leave a Reply