- சென்னை, செய்திகள், மாநிலச்செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியல் திருமாவளவன் வெளியிட்டார்

சென்னை, ஏப்.19-
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதல் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

11 வேட்பாளர்கள் அறிவிப்பு

விடுதலைச் சிறுத்தைகள் அங்கம் வகிக்கும் மக்கள் நலக் கூட்டணி, தே.மு.தி.க. மற்றும் த.மா.கா.வுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது. இதில் விடுதலை சிறுத்தைகளுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட இந்த கூட்டணியில் தே.மு.தி.க, ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை தங்களது வேட்பாளர் பட்டியலை முழுவதுமாக அறிவித்துள்ளன. அதில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தான் வேட்பாளர் பட்டியலை அறிவிக்காமல் இருந்தன.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில், 11 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று மாலை அறிவித்தார். இந்த பட்டியலில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

முதல் பட்டியலை வெளியிட்டு திருமாவளவன் பேசியதாவது:-

மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 17 தனித் தொகுதிகளிலும், 8 பொதுத் தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும். புதுச்சேரியில் மொத்தம் 7 தொகுதிகளில் வி.சி.க. போட்டியிடுகின்றது. முதற்கட்டமாக 11 பேர் கொண்ட பட்டியல் தற்போது வெளியிடப்படுகிறது. இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை (இன்று) வெளியிடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வேட்பாளர்கள் விபரம்:

புவனகிரி – சிந்தனைச் செல்வன்
குன்னம் – ஆளூர் ஷாநவாஸ்
மயிலம் – எஸ்.எஸ் பாலாஜி
சோழிங்கநல்லூர் – பன்னீர்தாஸ்

செய்யூர் – கரோலின்
சேலம் தெற்கு – கோ. ஜெயச்சந்திரன்
ஊத்தங்கரை – சி.கிருஷ்ணன் (எ) கனியமுதன்
துறையூர் – ஆதிமொழி (எ) சுஜா தேவி

வந்தவாசி – மேத்தா ரமேஷ்
ராசிபுரம் – கா.அர்ஜூன்
வேலூர் – அப்துல் ரகுமான் .

Leave a Reply